பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை சனிக்கிழமையன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சென்னையில் தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
Posted On:
26 AUG 2021 5:11PM by PIB Chennai
கடல் ரோந்து கப்பல்கள் வரிசையைல் ஏழாவதான இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை சனிக்கிழமையன்று (2021 ஆகஸ்ட் 28) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டிணத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்த கப்பல், கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும்.
98 மீட்டர் ரோந்து கப்பலில் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள். லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைதொடர்பு மற்றூம் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போஃபொர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன.
ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேக படக்குகள் ஆகியவற்றை சுமந்து செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலுடன் சேர்த்து, 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் உள்ளன.
ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவணே, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் திரு கே நடராஜன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749276
----
(Release ID: 1749318)
Visitor Counter : 318