ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

63 திறன்மேம்பாட்டு (சாமர்த்) பயிற்சி மையங்கள் மூலம் 1,565 கைவினை கலைஞர்கள் பயனடைந்தனர்

Posted On: 25 AUG 2021 6:13PM by PIB Chennai

ஜவுளித் துறையில் நிலவும் திறமை குறைவை போக்க, ஜவுளித்துறை அமைச்சகம் திறன்மேம்பாட்டு(சாமர்த்) பயிற்சி திட்டத்தை அமல்படுத்தி வருகிறதுஜவுளி மற்றும் அது தொடர்பான துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தேவையுள்ள மற்றும் வேலைவாய்ப்புள்ள திறன் மேம்பாட்டு பயிற்சிகளை  அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

குறிப்பிட்ட காலத்திற்குள், கைவினை கலைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, 65 தொகுப்புகளை ஜவுளித்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு பயிற்சி அளித்தது. இதன் மூலம் இந்த தொகுப்புகளில் உள்ள கைவினை கலைஞர்களின் தன்னிறைவு உறுதி செய்யப்படுகிறதுஇந்த தொகுப்புகளில் உள்ள கைவினை கலைஞர்கள் பயனடைவதற்காக, தேவை அடிப்படையிலான பயிற்சிகள் அமல்படுத்தப்படுகின்றனதிறன்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தொழில்நுட்ப மற்றும் மென் திறன் பயிற்சிகளின் மூலம், இத்தொகுப்பில் உள்ள கைவினை கலைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதனால்  அவர்களுக்கு ஊதியம் அல்லது சுய வேலைவாயப்பு மூலம் நிலையான வாழ்வாதாரம் ஏற்படுத்த முடிகிறது

தேசிய திறன் தகுதி திட்ட (NSQF)ன் கீழ் சீரமைக்கப்பட்ட கைவினைப் பிரிவுகளில், தொழில்நுட்ப பயிற்சியை வழங்க, இந்த தொகுப்புகளில், 65 கைவினை பயிற்சி மையங்களை மத்திய அரசு அமைத்தது

இந்த 65 பயிற்சி மையங்களில், முதல் பிரிவு பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதன் மூலம் 1,565 கைவினை கலைஞர்கள் பயனடைந்தனர். 2வது பிரிவினர், 2021 ஆகஸ்ட் மாதம் பயிற்சியை நிறைவு செய்கின்றனர். இதன் மூலம் 1,421 கலைஞர்கள் பயனடைவர்இந்த பயிற்சி திட்டத்தை அதிகரிக்க, மேலும், 65 புதிய கைவினை பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பயனடைவர்.

இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், மாநில அரசு முகமைகள், ஜவுளித்துறை அமைச்சகத்தின் அமைப்புகள், உற்பத்தி துறை மற்றும் தொழில் சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து அமல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748948

 

------


(Release ID: 1749245) Visitor Counter : 259


Read this release in: Hindi , English , Punjabi , Urdu