தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துடன் இணைந்து சுதந்திர நடைபயணத்தை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2021 3:19PM by PIB Chennai
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை ஒரு வார காலத்திற்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கொண்டாடி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 2கே சுதந்திர நடைபயணத்தை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், ஹைதராபாத் இன்று ஏற்பாடு செய்தது.
ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கல்லூரிகளின் நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் இதில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு நெக்லேஸ் சாலையில் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
தலைமை இயக்குநர் (தெற்கு) திரு எஸ் வெங்கடேஷ்வர் மற்றும் இயக்குநர் (பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்) திருமதி ஷ்ருதி பட்டேல் ஆகியோர் துணை இயக்குநர் திரு (டாக்டர்) மனஸ் கிருஷ்ணகாந்துடன் இணைந்து, மூவண்ண பலூன்களை காற்றில் பறக்கவிட்டு நடைப்பயணத்தை தொடங்கி வைத்தனர். ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களின் நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை இயக்குநர் (தெற்கு) திரு எஸ் வெங்கடேஷ்வர், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதே சுதந்திர நடைபயணத்தின் நோக்கம் என்றார்.
மேலும் பேசிய அவர், ஆகஸ்ட் 23 முதல் 29 வரையிலான ஐக்கானிக் வாரத்தின் போது, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடக அலகுகளான பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், வெளியீட்டு பிரிவு, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை நாட்டின் சுதந்திர போராட்டத்தில் விடுதலைக்காக பிராந்திய அளவில் பாடுபட்டவர்களின் பங்களிப்பை பல்வேறு செயல்பாடுகள் மூலம் எடுத்துரைக்கும் என்று கூறினார்.
நமது நாடு குறித்து இளைஞர்கள் மத்தியில் பெருமிதத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் சேவைக்கு நம்மை அர்ப்பணிக்கும் வகையிலும் இந்த செயல்பாடுகள் அமையும் என்று இயக்குநர் (பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்) திருமதி ஷ்ருதி பட்டேல் கூறினார்.
சுதந்திர போராட்டத்தின் முன்னணி வீரர்களின் வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1749074)
வருகையாளர் எண்ணிக்கை : 190