அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற தொழில்நுட்பம்: குறைந்த செலவில் கழிவு நீர் மறுபயன்பாட்டை அதிகரிக்க முடியும்

Posted On: 25 AUG 2021 3:59PM by PIB Chennai

குறைந்த செலவில் கழிவுநீர் மறுபயன்பாட்டை அதிகரிக்கக்கூடிய, புதிய மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற தொழில்நுட்பத்தைபுது தில்லியைச் சேர்ந்தடெரி’ (The Energy and Resources Institute) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் டாடக்ஸ் (TADOX) என அழைக்கப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்பம், குறைந்த செலவில், நிலையான முறையில்கழிவு நீர் மறுபயன்பாட்டை அதிகரிக்கும். புறஊதா - ஒளிச்சேர்க்கையைப் பயன்படுத்தும், இந்த தொழில்நுட்பம், நகராட்சி கழிவுநீர் மற்றும் மிகவும் மாசுபடுத்தும் தொழிற்சாலை  கழிவுநீரை  சுத்திகரிக்க முடியும் மற்றும் தொழில்துறை மற்றும் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்புகளில் அதன் மறுபயன்பாட்டை அதிகரிக்க முடியும்.

இந்த டாடக்ஸ் தொழில்நுட்பத்தால்உயிரியியல் மற்றும் 3ம் நிலை சுத்திகரிப்பு முறைகளை சார்ந்திருப்பதை குறைக்க முடியும் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க உதவும்.

இந்த தொழில்நுட்பம் கழிவுநீர் வெளியேற்றத்துக்கான மூலதன செலவை 25 முதல் 30 சதவீதம் குறைக்கும்.

தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்புக்கான செயல்பாட்டுச் செலவை 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கும்.

இந்த டாடக்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க, டெரி நிறுவனத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய அரசின் தண்ணீர் தொழில்நுட்ப திட்டம், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிசக்தி மையம் ஆகியவை உதவியுள்ளது

இந்த தொழில்நுட்பத்தை ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் பயன்படுத்துகிறது. ஜல்சக்தி அமைச்சகத்தின்நமாமி கங்கைதிட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தொழில்துறைகளின் பரிசோதனை மற்றும் மேம்பாட்டு திட்டத்துக்கு டாடக்ஸ் தொழில்நுட்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748888

-----



(Release ID: 1749028) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Hindi , Bengali