நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி: மேலும் 2 பேரை கைது செய்தது குருகிராம் ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம்
प्रविष्टि तिथि:
25 AUG 2021 9:31AM by PIB Chennai
போலி நிறுவனங்களுக்கு சரக்கு அனுப்பியதாக கணக்கு காட்டி, ரூ.176 கோடி உள்ளீட்டு வரி (ITC) மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் 2 பேரை, வருவாய் புலனாய்வு தலைமை இயக்குனரகத்தின், குருகிராம் பிரிவு கைது செய்துள்ளது.
ரூ.176 கோடி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக ரெடாமன்சி வோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சஞ்சய் கோயல், 8 போலி நிறுவனங்களை நடத்திய திரு தீபக் சர்மா ஆகியோரை வருவாய் புலனாய்வு தலைமை இயக்குனரகத்தின் குருகிராம் பிரிவு ஏற்கனவே கைது செய்திருந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் திரு மனீஷ் மோடி மற்றும் திரு கவுரவ் அகர்வால் ஆகியோரும் முக்கிய நபர்களாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.
பட்டய கணக்காளரான திரு மனீஷ் மோடி, புதுதில்லி, பிதம் புரா பகுதியைச் சேர்ந்தவர். இவர் போலி நிறுவனம் நடத்தி, சரக்கு மற்றும் சேவைகளை வழங்காமலேயே, கணக்கு காட்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிவாரண் என்டர்பிரைசஸ், பஞ்ச்வாதி என்டர்பிரைசஸ் போன்ற போலி நிறுவனங்கள் மூலம் இவர் ரூ.36 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரியில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவர் இன்னும் பல போலி நிறுவனங்களை வைத்திருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இது தொடா்பாக விசாரணை நடக்கிறது.
அகர்வால் நிறுவனத்தி்ன் பங்குதாரர் திரு கவுரவ் அகர்வால், உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்ட மற்றொரு முக்கிய நபர் என தெரியவந்துள்ளது. இவர் ரூ.15 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக திரு மனீஷ் மோடி, திரு கவுரவ் அகர்வால் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் முறையே ரூ.36 கோடி, ரூ.15 கோடி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுகிறது.
(रिलीज़ आईडी: 1748845)
आगंतुक पटल : 284