சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரு கோடி மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்தது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி திட்டம்

Posted On: 24 AUG 2021 7:42PM by PIB Chennai

தேசிய தொலைதூர மருத்துவச் சேவையான -சீஞ்சீவனி, நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட மருத்துவ ஆலோசனைகளை நடத்தியுள்ளதுகடந்த 10 மாதங்களில் இதன் வளர்ச்சி 1000 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,60,807  மருத்துவ ஆலோசனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தேசிய தொலைதூர மருத்துவ சேவை, 2021 ஜூலை மாதத்தில் 16,50,822  மருத்துவ ஆலோசனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

நாட்டில் இணையதள வசதி 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நிலையிலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்தப் புத்தாக்க டிஜிட்டல் சுகாதார முயற்சி, புவியியல் மற்றும் நேரத் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது

தற்போது நாள் ஒன்றுக்கு -சஞ்சீவனி நெட்வொர்க், 75,000 நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறது

இந்த தேசிய தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை இரண்டாம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் பிரபலமடைந்துள்ளது. தமிழகத்தில் சேலத்தில் 2,34,736 ஆலோசனைகள், -சஞ்சீவனி மூலம் பெறப்பட்டுள்ளன.

 அதிக மருத்துவ ஆலோசனைகள் பெற்ற மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு  27,51, 271 ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இங்கு 14,76,227 ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748652

----- 

 


(Release ID: 1748703) Visitor Counter : 304