நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காரீப் நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவில் உயர்வு: சுமார் 129.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 24 AUG 2021 6:23PM by PIB Chennai

நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 2019-20ஆம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில், மிக உயரிய அளவு கொள்முதலாக  இருந்த 773.45 லட்சம் மெட்ரிக்டன்’னையும்   கடந்துவிட்டது.   இதன் மூலம் நடப்பு காரீப் கொள்முதலில், சுமார் 129.03 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆரவு விலையாக ரூ. 1,64,951.77 கோடி பெற்றுள்ளனர்.

நடப்பு 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் நெல்கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. நெல் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் கடந்த 23ஆம் தேதி வரை 873.68 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கோதுமை உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில், கடந்த 18ஆம் தேதி வரை, 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே காலத்தில் 389.93 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 49.20 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 85603.57 கோடி பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748613

----


(வெளியீட்டு அடையாள எண்: 1748693) வருகையாளர் எண்ணிக்கை : 305
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Malayalam