நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டம்: தேசிய அலுமினியம் நிறுவனத்தால் மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன

Posted On: 24 AUG 2021 4:24PM by PIB Chennai

மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் நவரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அலுமினியம் நிறுவனம், ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமன்ஜோடி சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு வளாகத்தின் அருகில் வசிக்கும் மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் வகையில், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக கோராபுட் மற்றும் அங்குள்ள உற்பத்தி ஆலைகளைச் சுற்றி பிரம்மாண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தேசிய அலுமினியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒடிசாவில் உள்ள குட்டுடி, முண்டகடட்டி, உபெர்காடட்டி மற்றும் தலகாடட்டி ஆகிய கிராமங்களுக்கு தேசிய அலுமினியம் நிறுவனமும், தேசிய அலுமினியம் நிறுவன அறக்கட்டளையும் மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்துள்ளன. இந்த நிகழ்வின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்களிடையே ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்இயற்கையின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் தேசிய அலுமினியம் நிறுவனம், இதுவரை சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748547

-----



(Release ID: 1748666) Visitor Counter : 277