சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தியோகர் எய்ம்ஸ் வளாக ஆயுஷ் கட்டிடத்தில் வெளிநோயாளி பிரிவு மற்றும் இரவு விடுதிகள்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்
Posted On:
24 AUG 2021 1:50PM by PIB Chennai
ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் ஆயுஷ் கட்டிடம் மற்றும் இரவு நேர விடுதியை, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். அப்போது இத்துறையின் இணையமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவார் உடன் இருந்தார். புதிய ஆயுஷ் கட்டிடத்தில் வெளிநோயாளி பிரிவு சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், மக்கள் தற்போது சிறந்த மருத்துவச் சேவைகளைப் பெற முடியும். இந்த எய்ம்ஸ் மையத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 2018ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். வெளிநோயாளிகள் பிரிவு சேவைகளுடன், இங்குள்ள இரவு விடுதிகளின் தங்கி, தொலைதூரத்திலிருந்து வரும் மக்கள் தங்கள் சிகிச்சையை முடித்துத் திரும்ப முடியும். இது ஒட்டு மொத்த ஜார்கண்ட் மாநிலத்துக்கும் உதவும். ஜார்கண்ட் மாநிலத்தின் 3.19 கோடி மக்களுக்கும் சேவை அளிக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன், தியோகர் எய்ம்ஸ் தலைவர் டாக்டர். என்.கே.ஆரோரா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748505
----
(Release ID: 1748651)
Visitor Counter : 242