பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கிசாரா நிதி நிறுவனங்களாக அறிவிப்பதற்குத் தேவையான அளவுகோல்களை 348 நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை: மத்திய அரசு எச்சரிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 24 AUG 2021 4:16PM by PIB Chennai

கம்பெனிகள் சட்டம் 2013-இன் 406வது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட நிதி விதிமுறைகள் 2014 கீழ், வங்கிசாரா நிதி நிறுவனங்களாக இணைக்கப்பட்ட  நிறுவனங்கள், நிதி நிறுவனங்களாக அறிவிப்பதற்கு மத்திய அரசிடம் என்டிஎச்-4 படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.   

நிதி நிறுவனங்களாக அறிவிப்பதற்கு, மத்திய அரசிடம் விண்ணப்பித்த நிறுவனங்கள்கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கடந்த 24ஆம் தேதி வரை ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை ஆய்வு செய்த, 348 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் கூட, நிதி நிறுவனங்களாக அறிவிப்பதற்கான அளவு கோல்களை நிறைவேற்றவில்லைபல நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாகச் செயல்பட்டாலும், அவை மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. இது கம்பெனிகள் சட்டம் மற்றும் நிதி விதிமுறைகளுக்கு எதிரானது.

அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், முறையான வங்கிசாரா நிதி நிறுவனங்களாகச் செயல்படும் நிறுவனங்களின் முன்மாதிரிகளை சரிபார்த்து, உறுப்பினராகி, தங்கள் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.

இவ்வாறு கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1748629) வருகையாளர் எண்ணிக்கை : 327
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi