விண்வெளித்துறை

புவன் ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள புதிய இணையதளம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும்: டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 23 AUG 2021 5:36PM by PIB Chennai

புவன் யுக்த்தாராதிட்டத்தின் கீழ் இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல் மூலம்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட  ஜியோடேக் (போட்டோ மற்றும் வீடியோக்கள் அடங்கிய புவியியல் இடங்கள்)  தகவல்கள் (ஜியோடேக்) களஞ்சியமாக இந்த புவிசார் திட்டமிடல் இணையதளம் செயல்படும்.  இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சொட்டுநீர் பாசன திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம்  குறித்த தகவல்கள் புகைப்படங்களுடன் இருக்கும்.

இந்த இணையதளம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ‘இஸ்ரோ மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் அயராத கூட்டு முயற்சியின் மூலம் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஊரக திட்டமிடலுக்கான அரசின் சேவைகளை உணர்த்துகிறது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748294

*****************



(Release ID: 1748329) Visitor Counter : 361