அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய கல்வித்துறை மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது: பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா
Posted On:
23 AUG 2021 3:53PM by PIB Chennai
இந்திய கல்வித்துறை மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவத்தை அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழகங்களின் இந்திய வம்சாவழி தலைவர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினருடன் கலந்துரையாடி வருகிறார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் டி பி சிங்குடன் அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 தலைவர்கள்/ வேந்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் திரு தரஞ்சித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.
ஒருங்கிணைந்த விஷயங்களில், கால நிர்ணயத்துடன் கூடிய வரையறுக்கப்பட்ட துறைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், கலந்துரையாடலின் போது யோசனை தெரிவித்தனர்.
மருத்துவ சேவை, செயற்கை நுண்ணறிவு, வேளாண் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பக் கல்வியுடன் கூடிய மருத்துவ முறையை தரம் உயர்த்தவும் மருத்துவ அறிவியலை ஊக்குவிக்கவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748260
*****************
(Release ID: 1748289)
Visitor Counter : 205