சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 218-வது நாள்: 58 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 21 AUG 2021 7:52PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 58 கோடிக்கும் அதிகமானோருக்கு (58,08,57,505) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 43 லட்சத்திற்கும் அதிகமான (43,92,759) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன

18-44 வயது பிரிவில் 20,88,547 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 7,36,870 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 21,60,58,123 பேர் முதல் டோசையும், 1,92,54,925 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 11748466 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 1105070 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 300907 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 10140 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747900

 

------


(வெளியீட்டு அடையாள எண்: 1747916) வருகையாளர் எண்ணிக்கை : 314
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi