உள்துறை அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு
Posted On:
21 AUG 2021 5:36PM by PIB Chennai
2023 ஆகஸ்ட் 15 வரை நடத்தப்படவுள்ள விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களுக்கான யூனியன் பிரதேசங்களின் ஏற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் இன்று ஆய்வு செய்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து, அந்தந்த யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் ஆலோசகர்கள் கூட்டத்தின்போது பகிர்ந்தனர். நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும் வகையில் பல்வேறு புதுமையான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்ச்சிகள் பிரத்தியேகமாக இருக்க வேண்டும் என்றும், சுதந்திர போராட்டம்/சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் திட்டமிடுதலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை செயலாளர் வலியுறுத்தினார்.
முன்னதாக, மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், இந்திய லேண்ட் போர்ட் ஆணையத்தின் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த இதர அமைப்புகளின் தலைவர்களுடன் 2021 ஆகஸ்ட் 19 அன்று ஆலோசனை மேற்கொண்டு, மத்திய உள்துறை செயலாளர் விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747866
------
(Release ID: 1747892)
Visitor Counter : 318