அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் உபகரணங்களில் நேனோ தொழில்நுட்பத்தின் செயல்முறை குறித்து விஞ்ஞானிகள், மாணவர்கள் ஆலோசனை

Posted On: 21 AUG 2021 5:20PM by PIB Chennai

நேனோ பொருட்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஆகியோர், குவாண்டம் உபகரணங்கள், குவாண்டம் பொருட்கள், எரிசக்தி மாற்றம் மற்றும் சேமிப்பின் செயல்முறையை வலியுறுத்தும் நேனோ பொருட்களின் நிலவரம் மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் விவாதித்தனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் மொஹாலியில் உள்ள நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் சண்டிகரில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில், பல்வேறு கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த 20 வல்லுநர்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். நேனோ அறிவியல் மற்றும் நேனோ தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு துறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கின்போது நடைபெற்ற விரிவான சுவரொட்டி அமர்வில் இளம் மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747855

-----


(Release ID: 1747876) Visitor Counter : 255


Read this release in: English , Urdu , Hindi , Punjabi