குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
20 AUG 2021 4:11PM by PIB Chennai
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘ ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல பகுதிகளில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை ஓணம் குறிக்கிறது மற்றும் இயற்கையின் உயிர்ப்பு மற்றும் மிகுதியை கொண்டாடும் நிகழ்வாக உள்ளது. கேரளாவின் பழங்கால பண்டிகையான ஓணம், புகழ்பெற்ற மகாபலி மன்னரின் நினைவை கவுரவிக்கிறது. மலர்களின் வண்ணமயமான இந்த திருவிழா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி பாரம்பரிய விளையாட்டுகள், இசை மற்றும் நடனத்தில் ஒன்றாக இணைந்து ‘ஓணசத்யா’ என்ற பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்கும் நிகழ்வாக உள்ளது.
இந்த பண்டிகையை கொவிட் மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடும்படி நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விழா, நமது நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்.’’
*****************
(Release ID: 1747657)
Visitor Counter : 274