அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 மற்றும் காசநோய் பெருந்தொற்றுகள் குறித்து பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆய்வு செய்யவுள்ளன

Posted On: 18 AUG 2021 7:03PM by PIB Chennai

இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கொவிட்-19 மற்றும் காசநோய் பெருந்தொற்றுகளின் தாக்கம் குறித்து மேற்கண்ட நாடுகளை சேர்ந்த மருத்துவர்களின் குழு ஒன்று  கூட்டு ஆராய்ச்சிக்கு முடிவெடுத்துள்ளது.

இந்த கூட்டு ஆராய்ச்சியின் கீழ், காச நோயின் பரவல் குணாதசியங்கள் மீது கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்பு குறித்து இந்நாடுகளின் குழுக்கள் ஆய்வு செய்யும்.

உலகளவில் கொவிட்-19 பாதிப்புகளில் இரண்டாவது முதல் ஐந்தாவது இடங்கள் வரை பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பிடித்துள்ளன. காசநோய் சுமையை பொருத்தவரை, சர்வதேச சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள முதல் 24 நாடுகளில் மேற்கண்ட நாடுகள் உள்ளன. மேலும், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் பாதிப்புகளில் அதிகளவு பிரிக்ஸ் நாடுகளில் உள்ளன. எனவே, இந்த 4 பிரிக்ஸ் நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

காச நோய் பெருந்தொற்றின் கணித ரீதியான ஆய்வுக்கான பிரத்தியேக தளம் உருவாக்கப்படும். இந்த ஆய்வின் மூலம் பிரிக்ஸ் நாடுகளின் பெருந்தொற்று ஆய்வு திறன்கள் மேம்பட்டு, எதிர்கால கூட்டு ஆராய்ச்சிக்கான வலுவான அடித்தளம் அமையும்.

மேலும் விவரங்களுக்கு டாக்டர் ஊர்வசி பி சிங்கை  (drurvashi[at]gmail[dot]com) தொடர்பு கொள்ளவும்.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747111

----



(Release ID: 1747181) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi , Punjabi