சுரங்கங்கள் அமைச்சகம்
நாக்பூர் ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தில் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் மற்றும் ஓவியப் போட்டி
प्रविष्टि तिथि:
17 AUG 2021 4:46PM by PIB Chennai
மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம் ஏற்பாடு செய்த, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0- “விடுதலையின் அம்ருத் மஹோத்சவம்” நிகழ்ச்சியில் மையத்தின் ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடக்க நிகழ்வாக நடைபெற்ற 3 கிலோமீட்டர் தூரம் ஓட்டத்தில் சுமார் 55 ஊழியர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, “விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம்” என்ற தலைப்பில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு 15.8.2021 அன்று ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. மையத்தின் இயக்குநர் டாக்டர் அனுபம் அக்னிஹோத்ரி, சுமார் 75 பேருக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746700
----
(रिलीज़ आईडी: 1746773)
आगंतुक पटल : 321