ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பு குடியரசு தினத்தை கொண்டாடியது

Posted On: 16 AUG 2021 6:19PM by PIB Chennai

சரோஜினி நகரில் உள்ள தனது லிட்டில் கிங்டம் நர்சரி பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை 2021 ஆகஸ்ட் 15 அன்று ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பு கொண்டாடியது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பின் தலைவர் திருமதி அல்பனா பந்த் சர்மா, தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பால் நடத்தப்படும் பல்வேறு மையங்களை அவர் பார்வையிட்டார்.

இந்திய ரயில்வே முழுக்க பரவி உள்ள மகளிர் நல அமைப்புகளின் தலைமை அமைப்பாக ரயில்வே மகளிர் நல மத்திய அமைப்பு விளங்குகிறது. தேவையை சார்ந்து பல்வேறு சமூகநல நடவடிக்கைகளின் மூலம் ரயில்வே பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக இந்த அமைப்பு பணியாற்றுகிறது.

இந்திய-சீன போருக்குப் பிறகு 1962-ம் ஆண்டு தனது நடவடிக்கைகளை இந்த அமைப்பு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746446

*****************



(Release ID: 1746478) Visitor Counter : 238


Read this release in: Hindi , English , Urdu , Punjabi