சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கொவிட்-19 எதிர்வினை குறித்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் திரு வீணா ஜார்ஜ் ஆகியோருடன் மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 16 AUG 2021 6:05PM by PIB Chennai

கொவிட்-19 பொது சுகாதார எதிர்வினை குறித்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் மற்றும் அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் திரு வீணா ஜார்ஜ் ஆகியோருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய சுகாதார செயலாளர் மற்றும் கேரள சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் திரு மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ளார்.

கொவிட் அவசரகால எதிர்வினை தொகுப்பு-II-ன் கீழ் ரூ 267.35 கோடியை கேரளாவுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்காக மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியும். இது தவிர, மருந்துகள் தொகுப்பை உருவாக்குவதற்காக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும்.

கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் தொலை மருத்துவ வசதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய உயர் சிறப்பு மையத்தை மத்திய அரசின் ஆதரவுடன் நிறுவுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746442

*****************(Release ID: 1746476) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi