அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவில் அறிவியல்&தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு: நவீன பார்வையுடன் கூடிய வரலாற்று ஆய்வு

Posted On: 16 AUG 2021 5:31PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாக மூன்று நாள் தேசிய மாநாடு (காணொலி) ஒன்றை 2021 ஆகஸ்ட் 16 முதல் 18 வரை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர்) நடத்துகிறது.

இந்தியாவில் அறிவியல்&தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு: நவீன பார்வையுடன் கூடிய வரலாற்று ஆய்வுஎன்பதே இம்முக்கிய மாநாட்டின் மையக்கருவாகும்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில், இந்தியாவின் விடுதலை இயக்கத்தின் போதும், சுதந்திரத்திற்கு பிறகும் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இந்திய அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளின் பங்கு குறித்து எடுத்துரைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

அறிவியல் உள்கட்டமைப்பை கட்டமைத்தல்: கடந்த காலத்தில் இருந்து கற்றல், இந்திய தகவல் தொழில்நுட்ப புதுமைகளில் முக்கிய மாற்றங்கள், கல்வித்துறை-தொழில்துறை தொடர்புகள் மற்றும் தொழில்முனைதல்: காலனிய காலத்தில் இருந்து தற்போது வரை, இந்தியாவில் அறிவியலின் வளர்ச்சி, 21-வது நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் புதிய கல்விக் கொள்கை 2020 ஆகிய ஆறு முக்கிய அமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெறுகிறது.

தேசிய மாநாடு குறித்து பேசிய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவன இயக்குநர், பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், “சிறப்பான அறிவியல் பாரம்பரியத்தை இந்தியா கொண்டிருப்பதை நாம் அறிவோம். நவீன காலத்தில் நாட்டை கட்டமைப்பதில் நமது விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். நமது அறிவியல் பாரம்பரியம் மற்றும் நவீன வளர்ச்சி ஆகியவற்றை குறித்து அலசும் வாய்ப்பை விடுதலையின் அம்ரித் மகோத்சவம் நமக்கு வழங்கியுள்ளது. நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்காக இந்த தேசிய மாநாட்டை சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் நடத்துகிறது,” என்றார்.

சிஎஸ்ஐஆர் நிறுவனமான என்ஐஎஸ்சிபிஆரின் இலச்சினை இம்மாநாட்டின் போது 2021 ஆகஸ்ட் 16 அன்று வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746408

*****************


(Release ID: 1746454) Visitor Counter : 587


Read this release in: English , Urdu , Hindi , Punjabi