சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

75-ஆவது இந்திய சுதந்திர தினம்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தில் கோலாகல கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 15 AUG 2021 2:52PM by PIB Chennai

சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள அதன் மத்திய தலைமையகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி 75-ஆவது இந்திய சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.

இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜேந்திர சிங் கர்கால், கூடுதல் தலைமை இயக்குநர்கள் டாக்டர் எஸ் ராஜு மற்றும் திரு மகாதேவ் மாருதி பவார் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொவிட்- 19 நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திரு கார்கால், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்பு உரையாற்றிய அவர், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்குத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் மாபெரும் பங்களிப்பை நினைவுக்கூர்ந்தார். இந்த சுதந்திரத்தை போற்றிப் பாதுகாக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கான பாதையை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவன வளாகங்களில், தலைமை இயக்குநரும் கூடுதல் தலைமை இயக்குநர்களும், 75 மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746075

-----


(रिलीज़ आईडी: 1746153) आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu