பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு படைகளில் கவுரவிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஒப்புதல்

Posted On: 13 AUG 2021 7:44PM by PIB Chennai

பாதுகாப்பு படைகளில் இளநிலை அதிகாரிகளின் சிறப்பான சேவை மற்றும் பங்களிப்பை பாராட்டி, அவர்களது பணிக்காலத்தின் கடைசி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் அவர்களுக்கு கவுரவ பதவி அளிக்கப்படுகிறது (ஹானரரி கமிஷன்).

1984-ம் ஆண்டு முதல் இதற்கான விகிதாச்சாரம் கவுரவ லெஃப்டினெண்டுகளுக்கு 12:1000 ஆகவும், கவுரவ கேப்டன்களுக்கு அதற்கேற்பவும் உள்ளது.

இளைநிலை அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, கவுரவ லெஃப்டினெண்டுகளுக்கான விகிதாச்சாரம் 15:1000 ஆக தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளநிலை கமிஷன்டு அதிகாரிகள் தாங்கள் ஓய்வு பெறுவதற்குள் கவுரவ கமிஷன்டு அதிகாரிகளாக ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745563

*****************



(Release ID: 1745608) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Punjabi