உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

செப்டம்பர் 1 முதல் மத்தியப் பிரதேசத்திற்கு 4 புதிய விமானங்கள் தினம்தோறும் சேவைகளை வழங்கவுள்ளன: அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா

प्रविष्टि तिथि: 13 AUG 2021 5:12PM by PIB Chennai

2021 செப்டம்பர் 1 முதல் மத்தியப் பிரதேசத்திற்கு 4 புதிய இண்டிகோ விமானங்கள் தினம்தோறும் சேவைகளை வழங்கி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவுள்ளதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா இன்று அறிவித்தார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு சிந்தியா, 2021 செப்டம்பர் 1 முதல் மத்தியப் பிரதேசத்திற்கு 4 புதிய இண்டிகோ விமானங்கள் தினம்தோறும் சேவைகளை வழங்கவுள்ளன என்றும் தில்லி-குவாலியர்-தில்லி, குவாலியர்-இந்தோர்-குவாலியர், இந்தோர்-குவாலியர்-இந்தோர் மற்றும் குவாலியர்-இந்தோர்-குவாலியர் மார்க்கத்தில் இந்த விமானங்கள் சேவைகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

லட்சியமிகுந்த நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் மக்களின் போக்குவரத்தை மேம்படுத்தவும், அவர்களது வளர்ச்சிக்கான சிறகுகளை வழங்கவும் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இண்டிகோவின் பரேலி-மும்பை விமானத்தைவிமான போக்குவரத்து இணை அமைச்சர் டாக்டர் வி கே சிங் மற்றும் பரேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோஷ் கங்க்வார் ஆகியோருடன் இணைந்து திரு ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745473

*****************


(रिलीज़ आईडी: 1745607) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी