குடியரசுத் தலைவர் செயலகம்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றவுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 AUG 2021 6:30PM by PIB Chennai

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு நாளை (2021 ஆகஸ்ட் 14) உரையாற்றவுள்ளார்.

அனைத்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் மாலை 7 மணி முதல் முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவரது உரை ஒலி/ஒளிபரப்பப்படும்.

இந்தி மற்றும் ஆங்கில ஒளிபரப்பை தொடர்ந்து, தூர்தர்ஷனின் பிராந்திய மொழி அலைவரிசைகளில் அந்தந்த மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். பிராந்திய மொழி உரையை தனது பிராந்திய அலைவரிசைகளில் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1745590) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi