வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதிய கனவுகள், புதிய சக்தி மற்றும் புதிய உறுதியுடன் புதிய இந்தியாவுக்கான பிரகடனமாக இந்தியா@75 உள்ளது: திரு பியுஷ் கோயல்
Posted On:
12 AUG 2021 7:17PM by PIB Chennai
நீடித்த வளர்ச்சிக்காக அரசு மற்றும் தொழில்துறை இடையே ஒருங்கிணைப்பு எனும் தலைப்பிலான இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியுஷ் கோயல் காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்த வருட உச்சிமாநாட்டின் மையக்கருவாக 'இந்தியா@75: தற்சார்பு இந்தியாவுக்காக அரசு மற்றும் தொழில்துறை இணைந்து செயல்படுதல்' உள்ளது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு கோயல், 75 வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் பெறுவதற்காக நாம் பாடுபட்டோம் என்றும், தற்போது தற்சார்பு அடைவதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் கூறினார். வேகமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கான முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு நம்மிடையே உள்ளது என்று அவர் கூறினார். எழுபத்தி ஐந்தாம் வருடத்தில், எவ்வளவு தூரத்தை நாம் கடந்திருக்கிறோம் என்பதையும் நம் முன் உள்ள பாதையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
விடுதலையின் அம்ரித் மகோத்சவம் என்பது 130 கோடி இந்தியர்கள் செயல்படுவதற்கான அறைக்கூவல் என்றும், 130 கோடி என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல 130 கோடி சாத்தியக்கூறுகள் அல்லது அளவில்லா சாத்தியங்களின் ஆதாரங்கள் என்று அமைச்சர் கூறினார். எதிர்காலத்தை நோக்கி வழிநடத்திச் செல்பவர்களாக இளைஞர்கள் உள்ளார்கள் என்று அவர் கூறினார்.
புதிய கனவுகள், புதிய சக்தி மற்றும் புதிய உறுதியுடன் புதிய இந்தியாவுக்கான பிரகடனமாக இந்தியா@75 உள்ளது என்று திரு பியுஷ் கோயல் கூறினார். உலகத்திற்கான நம்பிக்கை ஒளி பண்டைய ஞானத்தால் வழிநடத்தப்பட்டு இளைஞர்களால் உந்துசக்தி பெறுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745241
----
(Release ID: 1745277)