ஆயுஷ்
நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்காக சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றவுள்ளன
Posted On:
12 AUG 2021 6:08PM by PIB Chennai
பொது சுகாதார அமைப்பில் ஆயுஷ் முறையை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகங்களின் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கிடையேயான உயர்மட்ட கூட்டம் ஒன்று நிர்மான் பவனில் இன்று நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த் சோனோவால் தலைமையில், பிரதமர் திரு நரேந்திர மோடி எதிர்பார்த்தவாறு நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்கான விரிவான அணுகலை முறைப்படுத்தி செயல்படுத்த இரு அமைச்சகங்களும் உறுதியேற்றன. நவீன மருத்துவம் மற்றும் நாட்டின் பாரம்பரிய சுகாதார அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பான செயல்முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, ஒன்றுபட்ட செயல்பாட்டை முன்னெடுத்து செல்லவும், இரு அமைச்சகங்களின் முழு ஒருங்கிணைப்பை அனைத்து மட்டங்களில் செயல்படுத்தவும் மாதமொரு முறை ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இந்த முன்னெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய திரு சோனோவால், இரு அமைச்சகங்களும் கைக்கோர்த்து ஒன்றிணைந்து பணியாற்றி பிரதமர் கூறியுள்ளபடி மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கும் என்றார். “இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடனும் ஆலோசிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
சுகாதார இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாயும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745204
-----
(Release ID: 1745249)
Visitor Counter : 260