அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ரோபோட்டிக்ஸ், உயிரி மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவிலான உணரிகள் கண்டுபிடிப்பு
Posted On:
12 AUG 2021 2:47PM by PIB Chennai
மனிதர்களின் நாடித் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிவதற்காக, குறைந்த விலையில், மென்மையான, வளைந்து கொடுக்கும் தன்மையுடன், அணிந்துகொள்ளும் உணரிகளை இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ரோபோட்டிக்ஸ், செயற்கை உறுப்புகள், சிறிய அளவில் துளையிடும் அறுவை சிகிச்சையிலும் கட்டிகள்/ புற்றுநோய் உயிரணுக்களை கண்டறிவதிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களின் ஆதரவுடன், மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தீப்தி குப்தா இந்த உணரிகளை தயாரித்துள்ளார்.
ஏசிஎஸ் அப்பிளைட் மெட்டீரியல்ஸ் அண்ட் இன்டர்ஃபேசஸ் என்ற சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இந்த உணரிகளுக்காக 3 தேசிய காப்புரிமைகளுக்கு டாக்டர் குப்தா விண்ணப்பித்துள்ளார். உயிரி மருத்துவ உபகரணங்கள், தோல் மின்னணுப் பொருட்கள் மற்றும் சிறிய அளவில் துளையிடும் அறுவை சிகிச்சைகளில் இந்த உணரிகள் சிறப்பாக செயல்படக் கூடும் என்று பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745115
-----
(Release ID: 1745239)