உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பரேலி-மும்பை இடையே புதிய விமான சேவை தொடக்கம்
Posted On:
12 AUG 2021 3:15PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மற்றும் மகாராஷ்டிராவின் மும்பை இடையேயான முதல் விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் விகே சிங், பரேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோஷ் கங்வார் முன்னிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, “நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில், இன்றைய தினம், மற்றொரு சிறப்பு வாய்ந்த தினமாக அமைந்துள்ளது. பரேலி-மும்பை வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள விமான சேவையும், பரேலி-பெங்களூரு இடையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கும் சேவையும் இந்தப் பகுதியில் போக்குவரத்து வசதியை மட்டும் மேம்படுத்தாமல், சுற்றுலா, கல்வி, தொழில்துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் பெரும் மடங்கு அதிகரிக்கும். மேலும் தில்லி-பரேலி இடையேயான சேவை ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தினசரி மேற்கொள்ளப்படும். இது போன்ற நேரடி விமான சேவைகளால் பரேலி பகுதி மக்கள் மட்டுமல்லாமல் நைனிடால், ராணிகேத் போன்ற அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் பயனடைவார்கள்”, என்று கூறினார்.
மெட்ரோ நகரங்கள் மற்றும் 2, 3-ஆம் தர நகரங்களை வான்வழியாக இணைக்கும் அரசன் முன்முயற்சியின் கீழ் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் இதுவரை 363 வழித்தடங்களில் 59 விமான நிலையங்கள் (5 ஹெலிபோர்ட் மற்றும் 2 நீர் விமான நிலையங்கள் உட்பட) இயங்கி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745130
----
(Release ID: 1745203)
Visitor Counter : 248