சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 208-வது நாள்: 52 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 11 AUG 2021 7:54PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 52 கோடிக்கும் அதிகமானோருக்கு (52,32,53,450) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 40 லட்சத்திற்கும் அதிகமான (40,02,634) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன

18-44 வயது பிரிவில் 20,58,952 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 4,30,665 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 18,45,43,154 பேர் முதல் டோசையும், 1,34,04,637 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 10540186 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 822624 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 288444 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3615 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744922

 

 


(रिलीज़ आईडी: 1744955) आगंतुक पटल : 326
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi