பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு

முதியோருக்கான வாழ்க்கைத் தர பட்டியல் இந்தியாவின் வயதான மக்களின் நலனை மதிப்பிடுகிறது

Posted On: 11 AUG 2021 2:25PM by PIB Chennai

முதியோர்களுக்கான வாழ்க்கைத்தர பட்டியலை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் பிபெக் தெப்ராய் வெளியிட்டார். இந்த பட்டியலை, போட்டியியல் மையம் உருவாக்கியது. இது முதியோர்களின் தெரிவிக்கப்படாத பிரச்சினைகளை வெளிகாட்டுகிறது.

இந்த அறிக்கை நாடு முழுவதும் பிராந்திய அளவிலான முதுமை பிரச்சினைகளை அடையாளம் காண்கிறது  மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த நிலவரத்தை மதிப்பிடுகிறது. நாட்டின் முதியோர்களின் நலனுக்கு உதவ, இந்தியா எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பது பற்றி இந்த பட்டியல் விரிவாக கூறுகிறது.

‘‘முதியோரின் தாக்கங்களை புரிந்துகொள்ள முறையான வசதி இல்லாமல் இருப்பதால், முதியோர்களுக்காக திட்டமிடுவது, கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு சவாலாக உள்ளது. இந்தியாவில் உள்ள முதியோர்களின் தேவைகள் மற்றும் வாய்ப்புகளை நாம் புரிந்து கொள்ளும் விதத்தை விரிவுபடுத்துவதற்காகமுதியோர்களின் வாழ்க்கைத் தர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் முதியோர்களின் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக நலன் போன்ற முக்கிய விஷயங்களை அளவிடுகிறது மற்றும் இந்தியாவில் உள்ள முதியோர்களின் ஆழ்ந்த நிலவரத்தை வழங்குகிறது. வரும் காலங்களில், மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும், தற்போதைய வாய்ப்பை பயன்படுத்தி, நேர்மறையான மாற்றங்களை தொடங்குவதற்கும் இந்த பட்டியல் நாட்டுக்கு உதவுகிறது.

முதியோர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள், ஒப்பீட்டளவில் முதியோர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் போன்ற பிரிவுகளில் முறையே ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் சண்டிகர் ஆகியவை முன்னணியில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744755

 

-----(Release ID: 1744914) Visitor Counter : 357