சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று திரு நிதின் கட்கரி வலியுறுத்தல்
Posted On:
11 AUG 2021 3:04PM by PIB Chennai
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பங்குதாரர்களின் ஒன்றுபட்ட குழு உணர்வு மற்றும் பங்களிப்பின் காரணமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நல்ல பலன்களை அடைய முடிந்தது என்றார். ஒரு நாளைக்கு 38 கிலோமீட்டர் எனும் உலக சாதனையை நாம் அடைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் என்பதே இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு முறையை பற்றி பேசிய திரு கட்கரி, சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விளக்கங்கள் வந்திருப்பதாகவும் மூன்று மாத காலத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். இன்னும் ஒரு வருட காலத்திற்குள் தில்லியிலிருந்து டேராடூனுக்கு இரண்டு மணி நேரத்திலும் தில்லியிலிருந்து ஹரித்துவாருக்கு இரண்டு மணி நேரத்திலும் தில்லியிலிருந்து சண்டிகருக்கு இரண்டு மணி நேரத்திலும் மற்றும் இன்னும் ஆறு மாதங்களில் தில்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒன்றரை மணி நேரத்திலும் செல்ல முடியும் என்றார். புதிய சாலைகளும் பசுமை போக்குவரத்தும் மிகவும் முக்கியம் என்று அமைச்சர் கூறினார்.
முழு விவரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்
https://t.co/gLaiHpHGYw?amp=1
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744769
-----
(Release ID: 1744859)
Visitor Counter : 250