அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எதிர்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு: மத்திய அமைச்சர் தகவல்
Posted On:
10 AUG 2021 3:55PM by PIB Chennai
எதிர்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை, எதிர்காலத்தில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. நாட்டில் ஹைட்ரஜன் திட்டத்தை உருவாக்க, 2021 மத்திய பட்ஜெட்டில், தேசிய ஹைட்ரஜன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்கான முதலீடு தொடர்ந்து அதிகரிப்பு:
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடு பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி திட்டங்களுக்கான மொத்த செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி:
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், ஆகியவை எரிசக்தி, தண்ணீர், சுகாதாரம் மற்றும் வானியல் போன்ற முக்கிய துறைகளில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744425
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744420
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744419
----
(Release ID: 1744562)
Visitor Counter : 317