சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 10 AUG 2021 9:57AM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,204 புதிய கொவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன; கடந்த 147 நாட்களில் இது மிகக் குறைவு

கொவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,88,508; கடந்த 139 நாட்களில் இது மிகக் குறைவு

மொத்த தொற்றாளர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.21 விழுக்காடு மட்டுமே; 2020 மார்ச் மாதம் முதல் இதுதான் மிகக் குறைவு

அதிக குணமடையும் விகிதம் எட்டப்பட்டுள்ளது; தற்போது இது 97.45 விழுக்காடு.

இதுவரை 3,11,80,968 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 41,511 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 51.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 விழுக்காட்டுக்கும் குறைவு, தற்போது இது 2.36 விழுக்காடு

தினசரி தொற்று உறுதி விகிதம் 1.87 விழுக்காடு; கடந்த 15 நாட்களாக 3 விழுக்காட்டுக்கும் குறைவு

இதுவரை மொத்தம் 48.32 கோடி கொவிட் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744296

•••••

(Release ID: 1744296)



(Release ID: 1744345) Visitor Counter : 196