நிதி அமைச்சகம்

171 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 2019-20 நிதியாண்டில் நிகர லாபம் ஈட்டியுள்ளன

Posted On: 09 AUG 2021 6:15PM by PIB Chennai

லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான அண்மைத் தகவல்களின்படி, மஹாரத்னா, நவரத்னா உள்ளிட்டவை அடங்கிய நாட்டில் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் 2019-20 நிதியாண்டில் நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. இந்த தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் டாக்டர்.பகவத் கிசான்ராவ் கராட் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 10 மஹாரத்னா, 14 நவரத்னா மற்றும் 73 மினி ரத்னா பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2021-22 நிதி நிலை அறிக்கையில் ஒரு மஹாரத்னா பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை விற்பனை செய்யவும், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் கண்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய இரண்டு நவரத்னா பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இரண்டு மினிரத்னா பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தின் கீழ் ரூ.99,756 கோடி அளவுக்கு வரி பிரச்சினைகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

தன்னார்வமாக வரி தொடர்பான பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க விவாத் சே விஷ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு.பங்கஜ் சௌத்திரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744139–

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744134

*****************



(Release ID: 1744202) Visitor Counter : 239


Read this release in: English , Urdu , Punjabi , Telugu