பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் ஓஎன்ஜிசியி-ன் 3வது கைவினைத் தொழில் திட்டம்: மத்திய அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி தொடங்கி வைத்தார்
Posted On:
08 AUG 2021 3:36PM by PIB Chennai
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆதரவுடன் ‘உஜ்வால் அபஹான்’ என்ற அசாம் கைத்தறி திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கடந்த 6ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டம், அசாம் சிவசாகர் பாதியாபர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உதவும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, அசாம் கைத்தறி திட்டம் ரூ.26 லட்சம் மதிப்புடையது மற்றும் இது உள்ளூர் நெசவாளர்களுக்கு கணிசமாக பயனளிக்கும், அதோடு ஊரக பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்’’ என்றார். இந்த திட்டங்கள் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதில் தொழில்நுட்ப மேம்பாடு முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோலியத்துறை செயலாளர் திரு தரூண் கபூர் பேசுகையில், ‘‘ ஓஎன்ஜிசி நிறுவனம் தனது சிஎஸ்ஆர் திட்டம் மூலம் கைவினை தொழிலுக்கு உதவுவது மற்றும் ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது பாராட்டத்தக்கது’’ என்றார்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு சுபாஷ் குமார் பேசுகையில், ‘‘ஓஎன்ஜிசி நிறுவனம் தான் செயல்படும் பகுதிகளில் உள்ளூர் மக்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கிறது, இது போன்ற பணிகளை ஓஎன்ஜிசி தொடர்ந்து செய்யும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743802
*****************
(Release ID: 1743880)
Visitor Counter : 242