ரெயில்வே அமைச்சகம்

ரயில்களின் வேகத்தை அதிகரித்தல் மற்றும் ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றுதல்

Posted On: 06 AUG 2021 3:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, தொலை தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

ரயில்களின் வேகத்தை அதிகரித்தல் என்பது தொடர் நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது. 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் முறையே 140 மற்றும் 70 ரயில்களின் வேகத்தை இந்திய ரயில்வே அதிகரித்தது.

2020-21-ம் வருடத்தில் 4363 கிலோமீட்டருக்கான ரயில் தடம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டான 2021-2022-ல் 2021 ஜூன் வரை 751 கிலோமீட்டருக்கான ரயில் தடம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் 1 நிலவரப்படி, ரூ 7.53 லட்சம் கோடி மதிப்பிலான 51,165 கிலோமீட்டருக்கான 484 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. 2021 மார்ச் வரை 10.638 கிலோமீட்டருக்கான திட்டங்கள் ரூ 2.14 லட்சம் கோடி மதிப்பில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

2014-21 வரை ஒரு வருடத்திற்கு 2,531 கிலோமீட்டர் எனும் விகிதத்தில் 17,720 கிலோமீட்டர் நீள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2009-14 வரை ஒரு வருடத்திற்கு 1,520 கிலோமீட்டர் எனும் விகிதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது 67 சதவீதம் அதிகமாகும்.

2021 மார்ச் 31 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தமுள்ள அகலப்பாதையின் அளவு 64,689 ரூட் கிலோமீட்டராக இருக்கும் நிலையில், 45,881 ரூட் கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டு, 18,808 ரூட் கிலோமீட்டர் மின்மயமாக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வேயை பொருத்தவரை, 2021 மார்ச் 31 நிலவரப்படி, மொத்தமுள்ள அகலப்பாதையின் அளவு 4,914 ரூட் கிலோமீட்டராக இருக்கும் நிலையில், 3,570 ரூட் கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டு, 1,344 ரூட் கிலோமீட்டர் மின்மயமாக்கப்படவுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, 2020 மார்ச் 23 முதல் பயணிகள் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே ரத்து செய்தது.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, மாநில அரசுகளின் கருத்துக்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2021 ஆகஸ்ட் 1 நிலவரப்படி, 1517 மெயில்/விரைவு வண்டிகள் மற்றும் 846 பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 6166 சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

நாடு முழுவதுமுள்ள 72 தடங்களில் 1040 கிசான் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 3.38 லட்சம் டன்கள் எடையிலான வேளாண்/தோட்டக்கலை/மீன்வள பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. 

ரயில்வேயில் செயல்பட்டு வந்த பல்வேறு உதவி எண்கள் 139 என்ற ஒரே எண்ணாக இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 12 மொழிகளில் இந்த வசதி கிடைக்கிறது.

 

நுகர்வோர் குறை தீர்ப்பு, விசாரணை, ஆலோசனை மற்றும் உதவிக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் புதுமையான ஒரே தீர்வாக ரயில்வே மடாடை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இணையம், செயலி, குறுந்தகவல், சமூக ஊடகம் மற்றும் உதவி எண் (139) ஆகியவற்றின் வாயிலாக இதை அணுகலாம்.

2020-21-ம் ஆண்டில் 139 உதவி எண் மூலம் பெறப்பட்ட 99.93 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, 72 சதவீதம் பேர் சிறப்புமற்றும் திருப்திகரம்என்று பின்னூட்டம் அளித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743170

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743168

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743173

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743169

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743172

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743174

*****************



(Release ID: 1743397) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Punjabi , Malayalam