கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மின்சார கார்களை முதல் முறையாக இயக்கிய துறைமுகம் வஉசி துறைமுகம்

Posted On: 05 AUG 2021 12:53PM by PIB Chennai

முதல் தொகுப்பில் வந்த மூன்று மின்சார கார்கள்தூத்துக்குடியில் உள்ள ..சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டனடாடா எக்ஸ்பிரஸ்-டி மின்சார வாகனங்கள், மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கூட்டு முயற்சி பொதுத்துறை நிறுவனமான  எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (Energy Efficiency Services Limited எனர்ஜி (EESL), 6 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் விநியோகித்துள்ளது. இன்னும் 3 மின்சார கார்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த குத்தகை ஒப்பந்தப்படி, இஇஎஸ்எல் நிறுவனம் துறைமுக வளாகத்தில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், வாகன காப்பீடு, பதிவு, வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன பராமரிப்பை இஇஎஸ்எல் நிறுவனம் வழங்கும். மாதாந்திர கட்டணத்தை, இஇஎஸ்எல் நிறுவனத்துக்கு வஉசி துறைமுகம் செலுத்தும்.

இந்த மின்சார கார்கள், 21.50 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரியுடன் வழங்கப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 231 கி.லோ மீட்டர் தூரம் மின்சார காரில் பயணிக்கலாம்மின்சார கார்களுக்கான ஏசி சார்ஜரில் ஒரே நேரத்தில் 3 கார்களுக்கு, தலா 2.2 கிலோ வாட் வீதத்தில் சார்ஜ் செய்ய முடியும். 8 மணி நேரத்தில் பூஜ்யத்திலிருந்து 100 சதவீதம் ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த மின்சார காரில் புகை போக்கி குழாய்  இல்லைஒவ்வொரு மின்சார வாகனமும், பசுமை இல்ல வாயுவில் கார்பன் தடத்தை ஒவ்வொரு ஆண்டும் 1.5 டன்களுக்கும் அதிகமாக குறைக்கும்.

கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாக, துறைமுக அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை, உலகை பாதுகாப்பாகவும்,நிலையான மற்றும் பசுமையான கடல்சார் பிரிவாக மாற்றவும் உறுதி பூண்டுள்ளது மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர நிலைகளை பின்பற்றும்அதற்கேற்பதுறைமுகத்தில் கார்பன் உமிழ்வை குறைக்க, ..சிதம்பரனார் துறைமுகமும், சுத்தமான எரிபொருள் யுக்தியை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

 

----

 



(Release ID: 1742721) Visitor Counter : 238