உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் உயர்ரக தொழில்நுட்ப நடவடிக்கைகள்: மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் தகவல்

Posted On: 05 AUG 2021 12:29PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காக உயர்ரக தொழில்நுட்ப நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இந்தத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுள் ஒருசில பின்வருமாறு:

•  விமான நிலையங்களின் நுழைவு வாயில் முதல், விமானத்தில் ஏறுவது வரை தொடர்பற்ற, சீரான, காகிதமற்ற சேவையை வழங்குவதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு டிஜி யாத்ரா குறித்த கொள்கை வெளியிடப்பட்டது. பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, புனே, வாரணாசி மற்றும் விஜயவாடா ஆகிய 6 விமான நிலையங்களில் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிரி அடையாள விமானம் ஏறுதல் அமைப்புமுறையை அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் தற்போது சோதனை நிலையில் உள்ளது. இந்த சோதனை முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள இதர விமான நிலையங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

• அடுத்த 4-5 ஆண்டுகளில் ரூ. 25000 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முனையங்களின் வளர்ச்சிப் பணியை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையகம் திட்டமிட்டுள்ளது.

•   விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

• குறுகியகால விமானப் பாதைகளை மேம்படுத்தி, குறைந்த எரிவாயுவின் பயன்பாட்டிற்காக நவீன விமானப் போக்குவரத்து மேலாண்மை தொழில்நுட்பங்களின் மூலம் இந்திய வான் எல்லையில் வழிகளை மறு சீரமைக்கும் பணி இந்திய விமானப் படையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

• விமான சரக்கு முனையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, மின்னணு தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

•  சிவில் விமானப் போக்குவரத்திற்கான தலைமை இயக்குநரகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகத்தில் மின்னணு ஆளுகை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742650

                                                                               ------


(Release ID: 1742719) Visitor Counter : 254


Read this release in: English , Urdu , Marathi , Malayalam