எஃகுத்துறை அமைச்சகம்

இந்திய ரயில்வேயின் தண்டவாளங்களுக்கான தேவை நிறைவேற்றம்

Posted On: 04 AUG 2021 1:39PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் 2021-22 நிதியாண்டில் (முதல் காலாண்டு) கீழ்காணும் புதிய தண்டவாள வகைகளுக்கான தேவையை இந்திய ரயில்வே, இந்திய எஃகு ஆணையகத்திடம் முன்வைத்துள்ளது:

1.       880 தர தண்டவாளத்திற்கு பதிலாக ஆர்-260 யூஐசி60 ரக தண்டவாளம்

2.       யூஐசி60-க்கு  மாற்றாக 601 வகை

3.       1175 ஹெச்டி தண்டவாளங்கள்

4.       260 மீட்டர் தூர தண்டவாளப் பகுதி.

இந்திய ரயில்வேயின் அனைத்து தேவைகளையும் இந்திய எஃகு ஆணையகம் நிறைவேற்றியுள்ளது.

எஃகு துறை, கட்டுப்படுத்தப்பட்ட துறை என்பதால், வசதிகளை வழங்கும் பணிகளையே அமைச்சகம் செய்து வருகிறது. எஃகு ஆலைகளின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் குறித்த முடிவை தொழில்நுட்ப வர்த்தக அம்சங்களின் அடிப்படையில்  நிறுவனங்கள்  மேற்கொள்ளும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742254

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742229

 

-----



(Release ID: 1742414) Visitor Counter : 166