அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மூளை வளர்ச்சி ஆய்வுகளுக்கு மனித அடிப்படையிலான மாதிரிகள்: இன்ஸ்பயர் உதவி தொகை பெற்றுள்ள விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Posted On: 04 AUG 2021 11:00AM by PIB Chennai

நரம்பணு வளர்ச்சி மற்றும் ஆட்டிஸம் போன்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மனித அடிப்படையிலான மாதிரிகளை இன்ஸ்பயர் உதவித்தொகை பெற்றுள்ள டாக்டர் யோகிதா கே அட்லகா உருவாக்கியுள்ளார். மூளை குறைபாடுகளுக்கான சிகிச்சை வழிமுறைகளை வடிவமைப்பதில் இந்தக் கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும்.

பல தசாப்தங்களாக மூளை சம்பந்தமான குறைபாடுகளை புரிந்து கொள்வதற்கு விலங்குகளின் மாதிரிகள் பயன்படுத்தப்படுவதுடன், இதில் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ சோதனைகளில் தோல்வி அடைந்துள்ளன. மனித மாதிரிகளின் பற்றாக்குறை, இவற்றின் சிகிச்சை உத்திகளை வடிவமைப்பதில் மிகவும் அவசியமான இதுபோன்ற குறைபாடுகளின்  பரவல் குறித்த அறிவின்மைக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பயர் உதவித்தொகை பெற்றுள்ள டாக்டர் யோகிதா கே அட்லகா, ஹரியானாவில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில், மூளை வளர்ச்சி மற்றும் குறைபாடு குறித்த புரிதலுக்காக மனித அடிப்படையிலான முதல்நிலை உயிரணு மாதிரியை உருவாக்கியுள்ளார். தற்போது ஃபரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்நேஷனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அவர் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். மனித புற ரத்தத்திலிருந்து தூண்டப்பட்ட ஃப்ளூரிபொடென்ட் முதல்நிலை உயிரணுக்களை உருவாக்கி, உற்பத்தி செய்வதற்கான நெறி முறையை இந்தியாவில்  முதன்முறையாக தமது ஆராய்ச்சி குழுவுடன் அவர் தயாரித்தார். தூண்டப்பட்ட ஃப்ளூரிபொடென்ட் முதல்நிலை உயிரணுக்களை, மூளை சார்ந்த முதல்நிலை உயிரணுக்களாக, அதாவது நரம்பியல் முதல்நிலை உயிரணுக்களாக வேறுபடுத்துவதற்கான நெறிமுறையையும் அவர்கள் சீர் படுத்தியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742164

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742219

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742220

****



(Release ID: 1742260) Visitor Counter : 211