இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

பிகார் பக்சரில் மருத்துவக் கழிவுகளை அகற்ற இன்சினரேட்டர்

Posted On: 04 AUG 2021 10:39AM by PIB Chennai

பிகார் மாநிலம் பக்சர் நகராட்சியில் மருத்துவ உயிரி கழிவுகளை அகற்றுவதற்காக இன்சினரேட்டர் வசதிகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய ராகவன் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். குப்பையிலிருந்து செல்வம் என்ற இயக்கத்தின் கீழ், மருத்துவ உயிரி கழிவு சுத்திகரிப்பில் புதுமை சவால் என்ற திட்டத்தின் வாயிலாக கணேஷ் பொறியியல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பஞ்சு, பிளாஸ்டிக் மற்றும் இது போன்ற பொருட்களை 50 கிலோ எடை என்ற விகிதத்தில் இந்த இன்சினரேட்டர் ஒரு மணி நேரத்தில் அகற்றவல்லது. இந்த தொழில்நுட்பம் பரிசோதனை முயற்சியாக பக்சரில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742150

••••••


(Release ID: 1742150)


(Release ID: 1742194) Visitor Counter : 279