எரிசக்தி அமைச்சகம்

சட்லஜ் ஜேவிஎன் மின் நிலையங்களின் மிக அதிகளவிலான மாதாந்திர மின் உற்பத்தி

Posted On: 03 AUG 2021 12:07PM by PIB Chennai

சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம்  (SJVN) நிறுவனத்தின் நத்பா ஜாக்ரி நீர் மின் நிலையத்தின் மாதாந்திர மின் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய சாதனை அளவான 1213.10 மில்லியன் யூனிட்டுகளை கடந்து, கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த மாதத்தில்  1216.56 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது.

அதேபோல், ராம்பூர் நீர் மின் நிலையம் கடந்த ஜூலை மாதத்தில், 335.90 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த 2020 ஜூலை மாதத்தில் உற்பத்தி செய்த 333.69 மில்லியன் என்ற முந்தைய சாதனையை மிஞ்சியது.

1500 மெகா வாட் திறனுள்ள நத்பா ஜாக்ரியின் வடிவமைப்பு ஆற்றல் 6612 மில்லியன் யூனிட்டுகள். 412 மெகாவாட் ராம்பூர் நீர் மின்சக்தி நிலையத்தின் ஆற்றல் 1878 மில்லியன் யூனிட்டுகள். ஆனால் இந்த மின் நிலையங்கள் முறையே 7445 மில்லியின் யூனிட்டுகள் மற்றும் 2098 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்தன.

சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம்(எஸ்ஜேவிஎன்) கடந்த 1988ம் ஆண்டு ஒற்றை நீர்மின் சக்தி திட்டமாகத் தொடங்கியது.   இன்று இந்நிறுவனத்தின் மொத்த பங்கு 9000 மெகாவாட்இதில் 2016.5 மெகா வாட் நீர்மின் சக்தித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 3156 மெகா வாட் நீர் மின் சக்தித் திட்டத்தின் கட்டுமானம் நடந்து வருகிறது. 4046 மெகா வாட் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. இன்று எஸ்ஜேவிஎன் நிறுவனம், நாட்டின் 9 மாநிலங்களிலும், 2 வெளிநாடுகளிலும் தடம் பதித்துள்ளதுமின்சக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் மற்ற துறைகளிலும் இந்நிறுவனம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.  2023ம் ஆண்டுக்குள் 5000 மெகா வாட் மின் உற்பத்தித் திறனை அடையவும், , 2030ம் ஆண்டுக்குள் 12000 மெகாவாட்  மின் உற்பத்தித் திறனை அடையவும், 2040ம் ஆண்டுக்குள் 25,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனையும் அடைவதை நோக்கி எஸ்ஜேவிஎன் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

*****

(Release ID: 1741782)



(Release ID: 1741851) Visitor Counter : 211