குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கொவிட் பாதிப்பில் இருந்து பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Posted On:
02 AUG 2021 4:07PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 27 அன்று கொண்டாடப்படுகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, அமைச்சகத்தால் நேரடி நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றும் பங்கை அங்கீகரிக்கும் விதத்தில் காணொலி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கொவிட் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அவற்றில் சில பின்வருமாறு:
1. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணைக் கடன்.
2. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ 3 லட்சம் கோடி பிணையில்லா தானியங்கி கடன்.
3. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்சார்பு இந்தியா நிதியின் மூலம் ரூ 50,000 கோடி ஈவுத்தொகை.
4. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வகைப்பாட்டிற்கு புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள்.
5. வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக ‘உதயம் பதிவு தளத்தின்’ மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பதிவு.
6. ரூ 200 கோடி வரையிலான கொள்முதலுக்கு சர்வதேச ஒப்பந்தமுறை இல்லை.
பட்டியல் பிரிவு/ பழங்குடி தொழில் முனைவோருக்கு தொழில்முறை ஆதரவு அளிப்பதற்காக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனம் மூலம் தேசிய பட்டியல் பிரிவு/ பழங்குடி மையம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய பட்டியல் பிரிவு/ பழங்குடி மையத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டு ரூ 77.78 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 79.65 கோடியும், 2020-21- ஆண்டு ரூ 120 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியல் பிரிவு/ பழங்குடி சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் 2017-18-ம் ஆண்டு ரூ 544.45 கோடி மதிப்புள்ள கொள்முதல்களும், 2018-19-ம் ஆண்டு ரூ 824.71 கோடி மதிப்புள்ள கொள்முதல்களும், 2019-20-ம் ஆண்டு ரூ 692.88 கோடி மதிப்புள்ள கொள்முதல்களும், 2020-21-ம் ஆண்டு ரூ 753.97 கோடி மதிப்புள்ள கொள்முதல்களும் செய்யப்பட்டுள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம், 2006-ன் 18-ம் பிரிவின் 3-ம் துணைப் பிரிவு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம், 2006-ன் 18-ம் பிரிவின் 4-ம் துணைப் பிரிவு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான தீர்வுகளை அளிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படும் டிரெட்ஸ் (TReDS) மின்னணு தளம், சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடிகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. ரூ 500 கோடி அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் டிரெட்ஸ் தளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741501
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741503
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741505
*****************
(Release ID: 1741606)
Visitor Counter : 444