அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நவீன யுக தொழில்நுட்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ரூர்கி ஐஐடி-யில் 7 புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகம்
Posted On:
02 AUG 2021 11:29AM by PIB Chennai
நவீன யுக தொழில்நுட்பங்களின் அதிகரித்துள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் சிறப்புமிக்க பொறியியல், கட்டிடக்கலை, பொருளாதாரம் மற்றும் மேலாண்மை ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் புதிதாக ஏழு கல்வித் திட்டங்களை ரூர்கி இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐ.ஐ.டி.) அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களும், பணிபுரியும் தொழில் வல்லுனர்களும் தங்களது துறைகளை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா நம்பிக்கை தெரிவித்தார். ஜூலை 30-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பழம்பெரும் தொழில்நுட்பக் கழகத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், “இது போன்ற புதிய முன்முயற்சிகள், பிறரிடமிருந்து தலைவர்களை வேறுபடுத்துகிறது. இந்தத் திட்டங்களின் சாராம்சம் மற்றும் தத்துவத்தை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.
ஆறு முதுநிலை பட்டப்படிப்புகளிலும், ஐந்து வருட ஒருங்கிணைந்த படிப்பிலும், அடுத்த மூன்றாவது பருவத்திலிருந்து (2021-2022) மாணவர்கள் சேரலாம். தற்போதைய காலத்துடன் அதிக தொடர்புடையதையும், வளர்ந்து வரும் துறைகளில் தரமான கல்வியை வழங்குவதையும் இந்தத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741416
*****
(Release ID: 1741416)
(Release ID: 1741441)
Visitor Counter : 287