சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கும் திட்ட நிகழ்ச்சிகளில் 10 கின்னஸ் உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன
Posted On:
01 AUG 2021 6:08PM by PIB Chennai
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் அதிப் (ADIP) திட்டம் மற்றும் தேசிய மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிகழ்ச்சி ஒன்றை அவுரங்காபாத் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள நகர மன்றத்தில், அலிம்கோ மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்தியது.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், தில்லியிலிருந்து காணொலி மூலம் முகாமை தொடங்கி வைத்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திருமிகு பிரதிமா பவுமிக் தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி காணொலி மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ரூ 2.43 மதிப்பிலான 5102 கருவிகள் மற்றும் உபகரணங்கள் 1521 மாற்றுத்திறனாளிகளுக்கும் 546 மூத்த குடிமக்களுக்கும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இன்றைய நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதன் மூலம் பயனாளிகளுக்கு அரசு திட்டத்தின் பலன்கள் வெளிப்படையான முறையில் கிடைக்கிறது என்றும் மக்களிடையே விழிப்புணர்வு உருவாகிறது என்றும் கூறினார்.
'மோடி செய்து காட்டுவார்' என்பதை சுட்டிக்காட்டிய அவர், ரூ 1210.67 கோடி மதிப்பிலான உபகரணங்கள் 20.01 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு 10428 முகாம்கள் மூலம் கடந்த 7 ஆண்டுகளிலும் இந்த வருடமும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கும் திட்ட நிகழ்ச்சிகளில் 10 கின்னஸ் உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திருமிகு பிரதிமா பவுமிக், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் விதத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1741275
*****************
(Release ID: 1741306)
Visitor Counter : 318