குடியரசுத் தலைவர் செயலகம்

சென்னையில் நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 01 AUG 2021 6:05PM by PIB Chennai

சென்னையில் நாளை (2021 ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

2021 ஆகஸ்ட் 2 முதல் 6 வரை தமிழ்நாட்டில் தங்கவிருக்கும் குடியரசுத் தலைவர், 2021 ஆகஸ்ட் 4 அன்று வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டு, 77-வது பணியாளர் பயிற்சியை சேர்ந்த மாணவ அலுவலர்களிடையே உரையாற்ற உள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1741303) आगंतुक पटल : 352
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi