சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்தியப் பிரதேசம் சிந்துவாராவில் 4146 மாற்றுத்திறனாளிகளுக்கு, 8291 உதவிகள் மற்றும் உதவிப் பொருட்கள்
प्रविष्टि तिथि:
31 JUL 2021 6:08PM by PIB Chennai
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வாங்குவதற்கு உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் இம்லிகேதா சிந்துவாராவில் உள்ள காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தில் (FDDI) இன்று நடத்தப்பட்டது.
மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக, போபாலில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துக் கொண்டார். மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இத்துறை இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா முன்னிலையில் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் இருவரும் புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இதில் மொத்தம் 8,291 உதவிகள் மற்றும் உதவி பொருட்கள் ரூ.4.32 கோடி மதிப்பில், 4146 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான், மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளாத சமூகம் முடங்கிய சமூகம் என கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்றார்.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கூறுகையில், ‘‘ மாற்றுத்திறனாளிகள் மனித வளத்தில் ஒருங்கிணைந்த அங்கத்தினர். பிரதமரின் அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலைநோக்குடன், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுகிறது மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741073
*****************
(रिलीज़ आईडी: 1741106)
आगंतुक पटल : 240