சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

“இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்”: நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கடைப்பிடிப்பு

Posted On: 31 JUL 2021 4:44PM by PIB Chennai

முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 1, 2021) “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்கடைபிடிக்கப்படும்.

முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக ஆகஸ்ட் 1, 2019 அன்று அரசு சட்டம் இயற்றியதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் வழக்குகள் கணிசமாக குறைந்திருப்பதாக திரு நக்வி தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

இஸ்லாமிய பெண்கள் உரிமை தினத்தைநாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் கடைபிடிக்கும்.

இந்த தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் ஆகியோருடன் புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரு நக்வி கலந்துக் கொள்வார்.

முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்களின் தற்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையைஅரசு வலுப்படுத்தியிருப்பதுடன், அவர்களது அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக திரு நக்வி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741043

*****************



(Release ID: 1741090) Visitor Counter : 314