நிதி அமைச்சகம்
கான்பூரில் வருமான வரித்துறை சோதனை
Posted On:
30 JUL 2021 4:28PM by PIB Chennai
கான்பூர் மற்றும் தில்லியை சேர்ந்த மிகப்பெரிய குழுமம் ஒன்றில் 2021 ஜூலை 29 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பான் மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் அக்குழுமம் ஈடுபட்டுள்ளது.
கான்பூர், நோய்டா, காசியாபாத், தில்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மொத்தம் 31 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பான்மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு தொழில்களிலும் கணக்கில் வராத வருவாயை பெரிய அளவில் குழுமம் ஈட்டி வந்தது.
கணக்கில் வராத பணம் போலி நிறுவனங்களின் மூலம் குழும நிறுவனங்களில் வரவு வைக்கப்பட்டதும், போலி நிறுவனங்ளை நாடு முழுவதும் குழுமம் உருவாக்கி இருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. மொத்தம் 115 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் முக்கிய இயக்குநர்கள் தாங்கள் போலியானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்களை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. குழுமத்தின் மொத்த சட்டவிரோத பண பரிவர்த்தனை செயல்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ 226 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணமும், பான் மசாலா தொழிலில் ரூ 110 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணமும் போலி நிறுவனங்கள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
போலி நிறுவனங்களின் 34 வங்கி கணக்குகளும் கண்டறியப்பட்டுள்ளன. கொல்கத்தாவை சேர்ந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ 80 கோடி மதிப்பில் உர விற்பனை மற்றும் கொள்முதல் என்று கணக்குக் காட்டி வங்கிகளில் பணம் செலுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனையின் போது ரூ 52 லட்சத்திற்கும் அதிமான பணம் மற்றும் 7 கிலோ தங்கம் கண்டறியப்பட்டது. ரூ 400 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பரிவர்த்தனைகள் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2021 ஜூன் மாதத்திற்கான மத்திய அரசின் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:
2021 ஜூன் மாதம் வரை ரூ 5,47,399 கோடியை மத்திய அரசு பெற்றிருந்தது. இதில் வரி வருவாய் ரூ 4,12,680 கோடி, வரியற்ற வருவாய் ரூ 1,27,317 கோடி, கடனற்ற முதலீட்டு வருவாய் ரூ 7,402 கோடி ஆக இருந்தது. கடனற்ற முதலீட்டு வருவாயில், ரூ 3,406 கோடி கடன்களை மீட்டது மூலமும், ரூ. 3,996 கோடி பங்கு விற்பனை மூலமும் திரட்டப்பட்டது.
மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ 1,17,524 கோடியை மத்திய அரசு வழங்கியது. மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ 8,21,644 கோடி ஆகும். இவற்றில் ரூ 7,10,148 கோடி வருவாய் கணக்கிலிருந்தும், ரூ 1,11,496 கோடி முதலீட்டு கணக்கிலிருந்தும் செலவிடப்பட்டது.
மொத்த வருவாய் கணக்கு செலவில், ரூ 1,84,295 கோடி வட்டியாகவும், ரூ 1,00,090 கோடி முக்கிய மானியமாகவும் செலவிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740707
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740711
*****************
(Release ID: 1740868)
Visitor Counter : 198